சென்னையில் பேருந்தில் பயணித்த பெண்களிடம் “ஓசி டிக்கெட் தானே எந்திரிங்க” எனக்கூறி இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை அய்யப்பன்தாங்கலில் இருந்து பிராட்வே செல்லும் 26ம் எண் கொண்ட பேருந்தில் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏறியுள்ளனர். தொடர்ந்து அந்த இளைஞர்கள் பெண்கள் சீட்டில் அமர்ந்திருந்த வயதானவர்களை எழுப்பிவிட்டு அங்கு அமர்ந்துள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்த பெண்களிடம் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள், “ஓசி டிக்கெட் தானே எழுந்திரிங்க” எனக்கூறி மிரட்டும் தொணியில் பேசினர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.