முகூர்த்த நாளையொட்டி மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 20-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.
சுபமுகூர்த்த நாட்களில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சுபமுகூர்த்த தினமான இன்று கோயிலில் 20-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. மேலும் தரிசனத்திற்காகவும் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்ததால் கோயிலில் கூட்டம் அலைமோதியது.