கோவையில் பெண்களை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர் காவலாளியை தாக்கி பெண்களின் விடுதிக்குள் நுழைய முயற்சிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சரவணம்பட்டி பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்த 2 பெண்கள், சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் பெண்களை பின்தொடர்ந்த நிலையில், உடனடியாக 2 பெண்களும் தங்கள் விடுதிக்குள் சென்றனர்.
தொடர்ந்து பெண்கள் விடுதிக்குள் அந்த நபர் நுழைய முயன்ற நிலையில், விடுதி காவலாளி அவரை தடுத்து நிறுத்தினார். இதையடுத்து அந்த நபர் தாக்கியதில் விடுதி காவலாளி காயமடைந்த நிலையில், சம்பவம் குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.