ஜப்பானின் ஆரோமி நகரில் ஏற்பட்ட பனிப்புயலால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஆரோமி நகரில் பனி புயல் ஏற்பட்டது.
இதனால் சுமார் 4 அடி வரை சாலைகளில் பனி படர்ந்துள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக ஆரோமி நகரில் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், பனியை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.