கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவகுமார், தனது மனைவி உஷாவுடன் கும்பமேளா சங்கமத்தில் புனித நீராடினார்.
பெரும்பாலான மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பாக இந்துத்துவா தொடர்பான மத அடையாளங்களிலிருந்து விலகி இருக்கின்றனர். அத்தகைய சூழலில் டி.கே.சிவகுமார் கும்பமேளாவில் புனித நீராடியிருப்பது மென்மையன இந்துத்துவ போக்கை காட்டுவதாக பலரும் கூறியுள்ளனர்.
சித்தராமையா இந்துத்துவா அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், டி.கே.சிவகுமாரின் செயல் நேர்முரணாகவுள்ளது. இதனால் காங்கிரஸ் மத அடையாளங்களில் பிளவுபட்டுள்ளது தெளிவாகியுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.