மணிப்பூரில் பயங்கரவாத அமைப்பினரால் கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கிகள் போலீசாரால் மீட்கப்பட்டன. மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு இன வன்முறை ஏற்பட்டது.
அப்போது காக்மயை எனும் இடத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை, சுமார் 30 பேர் கொண்ட ஆயுதமேந்திய குழு ஒன்று தாக்கியது. பின்னர் காவல் நிலையத்தில் இருந்த 9 துப்பாக்கிகளையும் அந்த குழு கொள்ளையடித்துச் சென்றது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.
அவர் கொள்ளையடித்த ஆயுதங்களை பதுக்கி வைக்கும் இடத்துக்கு போலீசாரை அழைத்துச் சென்றார். அங்கிருந்து 8 துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகளை போலீசார் மீட்டனர்.