தன் மீதான அதிர்ச்சியூட்டும் தாக்குதல் குறித்து சைஃப் அலி கான் மௌனம் கலைத்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், தான் தூங்கிக் கொண்டிருந்தபோது வேலைக்காரப் பெண் வீட்டுக்குள் யாரோ புகுந்துள்ளார் என கத்தியதாக கூறியுள்ளார். இதனை கேட்டு கீழே சென்றபோது, அங்கு இரு கைகளிலும் கத்தியுடன் இருந்த முகமூடி அணிந்த நபரிடம் மல்யுத்தம் செய்ததாகவும் கூறினார்.
தாக்குதலின் போது முதலில் கத்தியால் குத்தப்பட்டதை உணரவில்லை என்றும், கீழே விழுந்தபோதே அதனை உணர்ந்ததாகவும் கூறினார். முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தால் வலதுகாலில் உணர்வை இழந்ததாகவும் சைஃப் அலிகான் தெரிவித்தார். மேலும், தான் ரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்ததைக் கண்டு, கரீனா கத்தியதாகவும் அவர் கூறினார்.