லண்டனில் அனைத்து ரயில் நிலையங்களின் பெயர்களும் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும் எனும் பதிவுக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.
லண்டனின் வைட் சேப்பல் ரயில் நிலையத்தின் பெயர் பலகை ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், வங்க மொழியிலும் வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனுக்கு வங்கதேச சமூகம் செய்த பங்களிப்பைப் பாராட்டி, கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த பெயர் பலகை வைக்கப்பட்டது.
இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த அந்நாட்டு எம்பி ரூபர்ட் லோ, இது லண்டன் எனவும், இங்கு கண்டிப்பாக ரயில் நிலையங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் பதிவிட்டிருந்தார். இதற்கு எலான் மஸ்க், ஆம் என கமெண்ட் செய்து ஆதரவு தெரிவித்துள்ளார்.