ஜான்வி கபூர் தமிழில் வெப் தொடர் மூலம் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான தேவரா பாகம் 1 படத்தில் கதாநாயகியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜான்வி கபூர், பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் வெப் தொடர் மூலம் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் இயக்குனர் சற்குணம் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.