தைப்பூச விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் அனைத்து முருகன் ஆலயங்களும் விழா கோலம் பூண்டுள்ளன.
தை மாதத்தில் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் ஒன்று சேர்ந்து வரும் நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இது முருகனுக்கு மிகவும் உகந்த நாள் என்பதால்,
அனைத்து கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
குறிப்பாக முருகனின் அறுபடைவீடுகளும் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வண்ணம் உள்ளனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரை மேற்கொண்டும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அனைத்து முருகன் ஆலயங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.