2047 -ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளர்ச்சியடையச் செய்யும் நமது பாதையை முருகப்பெருமான் ஒளிரச்செய்வார் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தைப்பூசத்தை ஒட்டி தனது வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ள ஆளுநர், உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு முருகனின் ஆசி கிடைக்க வேண்டிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தீமைக்கு எதிராக முருகப்பெருமான் பெற்ற தீர்க்கமான வெற்றியை தைப்பூச நாளில் நாம் கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ள ஆளுநர்,
2047 -ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளர்ச்சியடையச் செய்யும் நமது பாதையை முருகப்பெருமான் ஒளிரச்செய்வார் என தெரிவித்துள்ளார்.
மேலும், முருகப் பெருமானின் பக்தி, உறுதி, சுய ஒழுக்கம் உள்ளிட்டவை நமது வாழ்க்கையிலும் பிரதிபலிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.