கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில், 14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலாலயம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
ஆறாம் கால யாக பூஜையை தொடர்ந்து ராஜகோபுரத்தின் அனைத்து விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியில் உள்ள
கமலக்கண்ணி அம்மன் மற்றும் மகாலஷ்மி தாயார் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நீர் ராஜகோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலுக்கு ஒரு கோடி 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க சல்லடை சமர்ப்பணம் செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருளாள பெருமாள் எம்பெருமானார் வம்சத்தில் வரக்கூடிய ஸ்ரீ குப்பன்ன ஐயங்கார் மடத்தில் இருந்தும், அவரின் சிஷ்யர்கள், அபிமானிகள், நன்கொடையாளர்கள் மூலமும் இந்த தங்க சல்லடை வழங்கப்பட்டது.
ஆயிரத்து 583 கிராம் எடைகொண்ட இந்த சல்லடை, சேலத்தில் இருந்து
ஸ்ரீபெரும்புதூர் எடுத்துச் செல்லப்பட்டு, ராமானுஜருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதனை கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது.