வடலூர் சத்திய ஞான சபையில் நடைபெற்ற தைப்பூச ஜோதி தரிசனத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான 154வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெள்ளை நிறம் உள்ளிட்ட ஏழு திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும் நிலையில், காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனத்தை கண்டு பரவசமடைந்தனர். தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவை முன்னிட்டு வடலூரில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுகின்றன.