முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்ச்சியும், அமைதியும் பெருகிட வேண்டிக்கொள்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளர்.
தைப்பூசத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில், உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதகா கூறியுள்ளார்.
முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அநீதிக்கு எதிரான தர்மத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் எம்பெருமான் முருகன், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, ஒளியைத் தரட்டும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதேபோல் வள்ளலார் பெருமான் ஜோதிமயமான தினத்தையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக, சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதை உணர்ந்தவர் வள்ளலார் என தெரிவித்துள்ளார்.
இறை வழிகாட்டுதலால் மட்டுமே ஜாதி வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றும் எடுத்துரைத்தவர். அனைவரிடமும் அன்பு மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டவர். அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துவதன் மூலம் இறைவனை அடையலாம் என்பதே வள்ளலாரின் கருத்து என தெரிவித்துள்ளார்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே வாழ்ந்த வள்ளலார் பெருமானைப் போற்றி வணங்குவோம் என்றும் அண்ணாமலை ’கூறியுள்ளார்.