திருப்போரூர் கந்தசாமி கோயிலில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சமுத்திரபாண்டியனின் மகன் அருண்ராஜ் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் மருத்துவரான கௌசிகா என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இருவருக்கும் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.