தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை பெற்று தந்தது தமிழக பாஜக என மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த முதல் குடியாம் தமிழ்க் குடியின் ஆதி கடவுளாய், நாம் அன்போடு போற்றுகின்ற அருள்மிகு முருகப் பெருமானின் உகந்த தினமான ‘தைப்பூசம்’ திருநாள் வாழ்த்துகளை, உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
தமிழக பாஜக சார்பாக நடைபெற்ற ‘வேல் யாத்திரை’ நிகழ்வின் போது, இத்திருநாளுக்கான அரசு விடுமுறையை பெற்றுத் தந்தோம் என்பதில் பெருமிதம் அடைகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
நம் மக்கள் அனைவருக்கும், அவரவர் நினைத்த நற்காரியங்களும், சகலவிதமான மகிழ்வோடு, அப்பன் முருகப் பெருமானின் அருளும் கிடைத்திட வேண்டுமென்று மனமார வேண்டிக் கொள்கிறேன். வெற்றிவேல்..! வீரவேல் என்றும் எல்.முருகன் கூறியுள்ளார்.