நாகை மாவட்டம், ஆழியூரில் உள்ள கங்காளநாத சுவாமி கோயிலில்
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கங்காளநாத சுவாமி கோயிலில் கடந்த 8ஆம் தேதி விக்னேஸ்வர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கிய நிலையில், காலை யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து கற்பகவல்லி அம்மன், கங்காளநாத சுவாமி விமானங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த நிலையில், முஸ்லிம் ஜமாத் அமைப்பினர் சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.