வேங்கை வயல் கிராமத்திற்குள் நுழைய முயன்ற விசிகவை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
வேங்கை வயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு திமுக கூட்டணி கட்சியான விசிக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வேங்கை வயல் கிராமத்திற்கு செல்லும் வழிகளை அடைத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், விசிக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வேங்கை வயலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.