தமிழகத்தில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் மத்திய அரசின் முத்ரா திட்டத்தில் நிதியுதவி பெற்று, தொழில் நிறுவனங்களை தொடங்கியுள்ளதாக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற தேசிய கிழக்கு மேம்பாடு உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது ஐஐடி-யில் பயின்று வரும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், தங்கள் பாரம்பரிய உடையணிந்து மேடை முன் சென்று ஆளுநருக்கு வணக்கம் தெரிவித்தனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி,
வடகிழக்கு மாநிலங்களில் 2013-ம் ஆண்டு வரை அப்போதைய சூழ்நிலை காரணமாக 1000 பேருக்கு மேல் வன்முறையில் இறந்ததாகவும், 2014-ல் பிரதமர் ஆட்சிக்கு வந்த பின்னர் அங்கு பிரிவினைவாதங்கள் பற்றிய விவாதங்கள் இல்லை எனவும் தெரிவித்தார்.