மனிதர்களை கண்டாலே அச்சப்பட்டு ஓடும் சுபாவம் கொண்ட மான்கள், பெண்மணி ஒருவரிடம் வாஞ்சையுடன் கொஞ்சிப் பழகும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
அந்தமான் நிக்கோபாரை சேர்ந்த அனுராதா ராவ் என்பவர் சிறுவயதாக இருந்த போது மான்களுக்கு உணவு வழங்கியுள்ளார். இதன்மூலம் அவருக்கு மான்களுடன் ஒருவித பிணைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மான்களுக்கு உணவளித்து வருகிறார்.
அவரை கண்டாலே மான்கள் சூழ்ந்து கொண்டு வாஞ்சையுடன் கொஞ்சுவதால், அனுராதா ராவ்-ஐ மான் பெண் என்றும் உள்ளூர்வாசிகள் அழைக்கின்றனர். தற்போது தனது ஊரில் மான்கள் மனிதர்களை கண்டு அச்சப்படுவதில்லை எனவும் அனுராதா தெரிவித்துள்ளார்.
















