அர்ஜென்டினா தலைநகரான பியூனஸ் அயர்ஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஓடை நீர் ரத்த சிவப்பு நிறத்தில் மாறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பியூனஸ் அயர்ஸில் இருந்து சுமார் 6 மைல் தெற்கே மக்கள் அதிகம் வசிக்கும் புறநகர் பகுதியில் சரண்டி என்ற நதி ஓடுகிறது. இந்த நதி பயணித்து கடலில் கலக்கும் வழியில் ஏராளமான தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன.
இவற்றில் இருந்து வெளியான ரசாயன கழிவுகளால் சரண்டி நதி முழுவதுமே ரத்த சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது. இதனால் உள்ளூர்வாசிகள் அச்சமடைந்த நிலையில், ரசாயன கழிவுகள் கலப்பது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.