சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 600 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்து அதனை இயக்குவதற்கான அனுமதி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் கொள்முதல் செய்யப்படும் மின்சாரப் பேருந்துகளை தனியார் நிறுவனங்கள் இயக்குவதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரி நாளிதழ்களில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் போக்குவரத்து துறையின் கீழ் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் தேர்ந்தடுக்கப்படும் நடைமுறைக்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் மின்சாரப் பேருந்துகளை இயக்கும் அனுமதியை தனியார் வசம் ஒப்படைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.