தைப்பூசத்தை ஒட்டி சிறுவாபுரி முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூசத்தை ஒட்டி சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்த நிலையில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கோயில் நிர்வாகத்தினர் பணத்தை பெற்றுக்கொண்டு சிலரை குறுக்கு வழியில் தரிசனம் செய்ய அனுமதித்தாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.