அதானி பவர் நிறுவனம் வங்கதேசத்துக்கு மீண்டும் முழுமையான மின்சாரத்தை விநியோகிக்க அந்நாடு கேட்டுக் கொண்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கீழ் வங்கதேச அரசுக்கும், அதானி பவர் நிறுவனத்துக்கும் மின் விநியோகத்துக்காக 25 ஆண்டு கால ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஆலையில் இருந்து வங்கதேசத்துக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் வங்கதேச அரசு இதற்கான கட்டணத்தை செலுத்த தாமதப்படுத்தியதால் மின் விநியோகத்தை பாதியாக் அதானி நிறுவனம் குறைத்தது.
இந்நிலையில் நிலுவைத் தொகையை அடைக்க, அதானி பவர் நிறுவனத்துக்கு மாதத்திற்கு 85 மில்லியன் டாலர்களை செலுத்தி வருவதால் மீண்டும் முழுமையான மின் விநியோகத்தை தொடங்க வங்கதேச மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.