OPEN AI நிறுவனத்தை விலைக்கு கேட்ட எலான் மஸ்க்குக்கு, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.
2015 இல் ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர் ஆவார். ஆனால், 2018-ல் கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழு அந்நிறுவனத்திடம் ப்ரொபோஸ் செய்துள்ளது.
இதற்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்துள்ள ஓபன் ஏஐ நிறுவன தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன், வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம் என கூறி எலான் மஸ்கை அதிரச் செய்துள்ளார்.