தைப்பூசத்தை ஒட்டி பக்தர்களுக்கு பாஜகவினர் பிரசாதம் வழங்கியபோது கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த தவறியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணியசாமி கோயிலில் தைப்பூசத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு பாஜக ஓ.பி.சி அணி மாநில செயலாளர் கே.ஆர்.வெங்கடேசன் ஏற்பாட்டில் அக்கட்சி நிர்வாகிகள் காலண்டர் மற்றும் பிரசாதங்களை வழங்கினார்.
அப்போது ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் பாஜகவினர் செய்வதறியாது திகைத்தனர். ஆனால் அருகிலிருந்த காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த உதவாமல் வேடிக்கை பார்த்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.