மகா பூர்ணிமாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் தற்போது வரை ஒரே நாளில் ஒரு கோடி பேர் புனித நீராடியதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்காக அம்மாநில அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தர்களின் எண்ணிக்கை 48 கோடியே 83 லட்சமாக உள்ள நிலையில், மகா பூர்ணிமாவை முன்னிட்டு ஒரே நாளில் ஒரு கோடி பேர் புனித நீராடி உள்ளனர். திரிவேணி சங்கமத்தில் நீராடிய பக்தர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.