விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாத பவுர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தை மாத பவுர்ணமியை ஒட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறை 4 நாட்களுக்கு அனுமதி வழங்கியது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். தொடர்ந்து அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.