அமெரிக்காவைச் சேர்ந்த குறைக்கடத்தி உபகரண நிறுவனம் இந்தியாவில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் குறைக்கடத்தி லட்சியங்கள் குறிப்பிடத்தக்க ஊக்கத்தைப் பெற்று வருவதாகவும், குறைக்கடத்தி பயணத்தின் மைல்கல்லாக அமெரிக்க நிறுவனமான LAM RESEARCH இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.