திருவொற்றியூர் அருகே கேஎப்சி உணவகத்தில் வாங்கி சாப்பிட்ட சிக்கனில் மனித முடி இருந்தாக கூறி வாடிக்கையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் கேஎப்சி உணவகத்தில் அதே பகுதியை சேர்ந்த ஃபரீத் என்பவர் தனது 9 வயது மகனுடன் சிக்கன் சாப்பிட சென்றுள்ளார். 5 லெக் பீஸ், பர்கர், பெப்ஸி என ஆர்டர் செய்து சாப்பிட்ட நிலையில், அவரது மகன் சாப்பிட்ட சிக்கனில் மனித முடி இருந்துள்ளது.
இது குறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காததால் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாடிக்கையாளர் ஃபரீத், ஆசையாய் வாங்கி சாப்பிட்ட சிக்கனில் இருந்த மனித முடி தனது மகனின் பற்களில் சிக்கி கொண்டதாக தெரிவித்தார்.
கேப்சி உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையால் அனைவரும் இங்கு சாப்பிட வருகிறார்கள் எனக்கூறிய அவர், உணவகத்தின் மீது உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.