ஈரோடு அடுத்த சென்னிமலை தேரோட்டத்தின்போது மயங்கி விழுந்த சிறுவனுக்கு மருத்துவக்குழுவினர் விரைந்து முதலுதவி கொடுத்து காப்பாற்றினர்.
தைப்பூசத்தை ஒட்டி சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த 10 வயது சிறுவன் திடிரென மயங்கி கீழே விழுந்தார்.
அப்போது அவரை மீட்ட மருத்துவக் குழுவினர் துரிதமாக செயல்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இது குறித்த வீடியோ காட்சி வெளியான நிலையில் மருத்துவக் குழுவினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.