திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் கடந்த வாரம் ஏழாம் வகுப்பு பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர் சுந்தர வடிவேல் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.
அனைவரிடமும் எழுத்து பூர்வமாக புகார்கள் பெறப்பட்ட நிலையில், விடுமுறைக்காக புதுக்கோட்டைக்கு சென்றிருந்த ஆசிரியரை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.