குமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜரின் கல்வெட்டு உடைக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாத்தூரில் உள்ள தொட்டி பாலத்தின் நுழைவு வாயிலில் இருந்த காமராஜரின் கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதானதால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் நிலவுகிறது.
இந்த நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகை உட்பட காங்கிரஸ் கட்சியினர் நுழைவுவாயில் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.