உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சடலமாக காணப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த முத்து என்பவரின் சடலத்தை மீட்டனர்.
மேலும், குளத்தில் மிதந்தபடி முத்துவின் மனைவி தேவி, மகன் பிரவீன்குமார் ஆகியோரின் சடலங்களை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 3 பேரின் மர்ம மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.