சேவை செய்வதையே செஞ்சிலுவை சங்கத்தினர் குறிக்கோளாக வைத்து செயல்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்துவைத்த அவர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், சேவை செய்வதையே நோக்கமாக கொண்டு செஞ்சிலுவை சங்கத்தினர் இயங்கி வருவதாக தெரிவித்தார். மக்களுக்கு சேவை செய்வதில் தங்கள் நேரத்தை செலவிடும் செஞ்சிலுவை சங்கத்தினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த ஆர்.என்.ரவி, பேரிடர் சமயங்களில் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செஞ்சிலுவை சங்கத்தினர் உழைப்பதாக தெரிவித்தார்.
மேலும் மன அழுத்தத்தால் நிகழும் தற்கொலைகளை தடுக்கும் விழிப்புணர்வு பணிகளை செஞ்சிலுவை சங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.