செங்கோட்டையில் நகராட்சி கூட்டத்தை நடத்தாமல் திமுக நகர்மன்ற தலைவர் பாதியில் வெளியேறிய நிலையில், அதிமுக கவுன்சிலர் அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
செங்கோட்டை நகராட்சி கூட்டம் திமுக நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி தலைமையில் தொடங்கியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பே மினிட் புத்தகத்தில் கையெழுத்திடுமாறு கவுன்சிலர்களிடம் நகர்மன்ற தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்றும், அதுகுறித்து விவாதம் செய்த பின்னர் தான் கையெழுத்து போடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து திமுக கவுன்சிலர்களுக்கும், அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், நகர்மன்ற தலைவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் நகர்மன்ற தலைவரை பின்தொடர்ந்து சென்ற அதிமுக கவுன்சிலர் முத்துப்பாண்டி, கூட்டத்தை நடத்தியே ஆக வேண்டும் எனக்கூறி அவருடன் தகராறில் ஈடுபட்டார்.