ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்களை மணல் திருடர்கள் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பரமக்குடி படேல் தெருவை சேரந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரசேகர், வைகை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தல் கும்பல், டீ கடையில் அமர்ந்திருந்த சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர் விக்னேஷ்வரனை கடுமையாக தாக்கியது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது.