பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் ஆண்- பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் ரயில் மோதி இளைஞரும், இளம்பெண் ஒருவரும் இறந்து கிடந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் சுமார் 1 மணி நேர தாமதத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை கைபற்றினர். இதையடுத்து கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.