நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை பொது ஏலம் விட வலியுறுத்தி ஆட்சியரிடம் பாஜகவினர் மனு அளித்தனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் இங்குள்ள கடைகளை இடைத்தரகர்கள் கையகப்படுத்தி அதிக வாடகைக்கு விடுவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து புகாரளிக்க 100க்கும் மேற்பட்ட பாஜவினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற நிலையில், 6 பேருக்கு மட்டுமே ஆட்சியரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து ஆட்சியரை சந்தித்த பாஜகவினர், இடைத்தரகர்கள் தங்கள் பெயரில் கடைகளை எடுத்துவிட்டு கூடுதல் வாடகைக்கு விடுவதாகவும், இதை தடுக்க பொது ஏலம் விட வேண்டும் எனவும் மனு அளித்தனர்.