புதுச்சேரி சட்டசபையில் தர்ணாவில் ஈடுபட்ட சுயேட்சை எம்எல்ஏ நேருவை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடிய நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
முன்னதாக புதிய மதுபான கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியதைக் கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பேரவை படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சுயேட்சை எம்எல்ஏ நேரு, சபாநாயகர் செல்வம் அவையை நடத்தக்கூடாது எனக்கூறி அமளியில் ஈடுபட்டார். இதனால் கூட்டத்தொடர் முழுவதும் எம்எல்ஏ நேருவை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.