சேலத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை, தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆத்தூர் அடுத்த கருப்பூர் பகுதியில் தந்தை, மகனான அருணாச்சலம், பிரபாகரன் ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இதுதொடர்பாக கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மது விற்பனை செய்தவர்களை தாங்களே கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைப்போம் என சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட அருணாச்சலம் மற்றும் பிரபாகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.