செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா என அவரது தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்ய குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் 212 அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் சாட்சிகளாக உள்ள அரசு ஊழியர்கள் அச்சப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா என அவரது தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
கடந்த முறையே தாங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்ததாகக் கூறிய நீதிபதிகள், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்பினால் வழக்கை விரைந்து விசாரிப்பதாகக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.