சென்னையில் நடத்தப்பட உள்ள வேல் யாத்திரையை வேறு இடத்தில் நடத்துவது தொடர்பாக பிப்ரவரி 14ம் தேதிக்குள் பதிலளிக்க பாரத் இந்து முன்னணி அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை காக்க வலியுறுத்தி சென்னையில் வேல் யாத்திரை நடத்த பாரத் இந்து முன்னணி அமைப்பு திட்டமிட்டது.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளைந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் வேல் யாத்திரை நடத்தப்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து அரசுத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் வேல் யாத்திரை நடத்துவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும், வேல் யாத்திரையை வேறு இடத்தில் நடத்துவது தொடர்பாக பிப்ரவரி 14ம் தேதிக்குள் பதிலளிக்க பாரத் இந்து முன்னணி அமைப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.