அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அதீத பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், தலைநகர் வாஷிங்டனில் மிதமான பனிப்பொழிவு காணப்படுகிறது.
அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயலின் காரணமாக மிசோரி, விர்ஜினியா உள்ளிட்ட 12 மாகாணங்களில் சுமார் 2 லட்சம் சதுர மைல் பரப்பளவிற்கு பனிப்பொழிவு காணப்படுகிறது.
தலைநகர் வாஷிங்டனில் 12 சென்டிமீட்டர் அளவிற்கு பனிப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. வெள்ளை மாளிகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சாலைகளிலும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
அதே நேரம் வாஷிங்டன் மாவட்ட நிர்வாகமும் உடனுக்குடன் பனியை அகற்றும் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.