தர்ம முனீஸ்வரன் கைது - அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!
Sep 18, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 19, 2026, 02:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை தொடர்பாக பாஜக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்துள்ளது.

ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில்,  உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கி கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது.

மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.

பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: annamalai ipsDMK governmentannamalai liveVilathikulam.student sexually assaultedannamalai todayannamalai campaignbjp annamalaibjp annamalai speechannamalaiannamalai speech bjpannamalai bjpVedanathamannamalai speechdharma muniswaran arrest
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

Next Post

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies