சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தைல மரக்கன்றுகள் நடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ், சிவகங்கையில் நாற்றாங்கால் பண்ணை மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், செய்களத்தூரில் பண்ணை அமைத்து தைல மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டது. தைல மரக்கன்றுகள் நட எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மரகன்றுகள் நடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.