கேரளாவில் அரசு நர்சிங் கல்லூரியில் இளநிலை மாணவர்களை, 3ஆம் ஆண்டு மாணவர்கள் தாக்கி, நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம் அருகே உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் பயிலும் 3ஆம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை கடந்த 3 மாதங்களாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மாணவர்களை நிர்வாண கோலத்தில் நிற்க வைத்து, பின்னர் பளு தூக்கும் உபகரணங்களை கொண்டு பல்வேறு கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக 3 மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், 3ஆம் ஆண்டு பயிலும் 5 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.