பெங்களூவில் வீட்டு வாடகை தொடர்பாக இளைஞர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அறையின் நடுவில் நின்று கொண்டு பக்கவாட்டில் கைகளை நீட்டினால் 2 சுவர்களையும் எளிதில் தொட முடிகிறது என்றும், கையையும், கால்களையும் நீட்டினால் இரு சுவர்களையும் தொட முடியும் எனவும் அந்த இளைஞர் கூறியுள்ளார்.
மிகச்சிறிய தீப்பெட்டி வடிவில் இருக்கும் இந்த வீட்டிற்கு மாத வாடகை 25 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள வீடியோ, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.