விருதுநகரில் கனிம வளக் கொள்ளையைத் தடுக்க தவறிய தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சாத்தூர் வட்டம், இ.குமாரலிங்கபுரம் கிராமம், பெரியகுளம் கண்மாயில் கடந்த ஜனவரி 29-ம் தேதி முறைகேடாக கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்த வருவாய் துறையினர் அவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதேசமயம் மண் திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், கனிம வளக் கொள்ளையை தடுக்க தவறிய சாத்தூர் தாசில்தார் ராமநாதன் உள்ளிட்ட நான்கு வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை உதவி பொறியாளர், வேளாண்மை துறை உதவி வேளாண் அலுவலர் உள்ளிட்ட ஏழு அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.