சங்கரன்கோவிலில் காவல்துறையினரை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகத்தை வலுக்கட்டாயமாக காவல் துறையினர் கைது செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் காவல்துறையினரை கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.